பேராவூரணி - பட்டுக்கோட்டை - காரைக்குடி - பட்டுக்கோட்டை இடையே வாரம் இருமுறை சிறப்பு பயணிகள் ரயில் சேவை வரும் ஜூலை 2 ம் தேதி முதல் பிரதி திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் இயக்கப்படுகிறது.
பட்டுக்கோட்டை - காரைக்குடி வரை உள்ள அகலப்பாதையில் அதிவேக சோதனை ஓட்டம், கடந்த மார்ச் 1 ந் தேதி நடைபெற்றது. இதையடுத்து, இந்த வழித்தடத்தில் பயணிகள் சிறப்பு ரயில் சோதனை ஓட்டம் கடந்த மார்ச் 26 ல் நடைபெற்றது. இதன்பின்னர், காரைக்குடி - பட்டுக்கோட்டை வழித்தடத்தில் மணிக்கு 73.47 கிலோ மீட்டர் வேகத்தில், ஒரு நாள் சிறப்பு ரயில் ( (DEMU) Diesel Electric Multiple Unit) சேவை மார்ச் 30 ந் தேதி இயக்கப்பட்டது.
இந்நிலையில், பட்டுக்கோட்டை - காரைக்குடி - பட்டுக்கோட்டை இடையே முதல் சேவை ஜூன் 30ந் தேதி (சனிக்கிழமை) இயக்கப்பட்டு, பின்னர், ஜூலை 2 ம் தேதி முதல் வாரம் இருமுறை (பிரதி திங்கள் மற்றும் வியாழக்கிழமை) சிறப்பு பயணிகள் ரயில் சேவை 3 மாதங்களுக்கு சோதனை அடிப்படையில் இயக்கப்படுகிறது.
ரயில் கால அட்டவணை விவரங்கள்:
TRAIN NO: 06856 காரைக்குடியில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு,
கண்டனூர் புதுவயல் (06.28 - 06.29),
பெரியக்கோட்டை (06.43 - 06.44),
வளரமாணிக்கம் (06.59 - 07.00),
அறந்தாங்கி (08.20 - 08.22),
ஆயங்குடி (08.31 - 08.32),
பேராவூரணி (09.45 - 09.47),
ஒட்டாங்காடு (10.55 - 10.56) வழியாக மதியம் 12.30 மணிக்கு பட்டுக்கோட்டை வந்து சேரும்.
அதேபோல், TRAIN NO: 06855 பட்டுக்கோட்டையில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு
ஒட்டாங்காடு (14.20 - 14.21)
பேராவூரணி (15.30 - 15.32),
ஆயங்குடி (16.44 - 16.45),
அறந்தாங்கி (16.55 - 16.57),
வளரமாணிக்கம் (18.17 - 18.18),
பெரியக்கோட்டை (18.33 - 18.34),
கண்டனூர் புதுவயல் (18.49 - 18.50) வழியாக இரவு 7.30 மணிக்கு காரைக்குடி வந்து சேரும்.
காரைக்குடி ~ பட்டுக்கோட்டை இடையிலான 73 கி.மீ தூரத்தை கடக்க 6 மணி நேரம் 30 நிமிடங்கள் ஆகிறது. அறந்தாங்கி, பேராவூரணி ஆகிய ரயில் நிலையங்களில் 2 நிமிடங்கள் இடைவெளியிலும், மீதமுள்ள நிலையங்களில் 1 நிமிடம் மட்டும் ரயில் நின்று செல்லும்.