பேராவூரணி அருகே கயறு தொழிற்சாலையில் தீ விபத்து.

0
பேராவூரணி அருகே கயறு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன.தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை அடுத்த மாவடுகுறிச்சி மேற்கு தென்னங்குடி உக்கடை பகுதியில், தென்னை மட்டையில் இருந்து கயறு தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இதை இப்பகுதியை சேர்ந்த நவநீதன் மகன் ராஜா என்பவர் ஒப்பந்த அடிப்படையில் எடுத்து நடத்தி வருகிறார்.தென்னங்குடியை அடுத்த ஆத்தாளூரில் திருவிழா நடந்து வருவதால் வியாழக்கிழமை தொழிற்சாலைக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தொழிலாளர்கள் இல்லாததால் கயறு தொழிற்சாலை மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் வியாழனன்று மாலை மின்கசிவு காரணமாக திடீரென தீப்பற்றியது. ஓட்டுக் கட்டிடமாக இருந்த போதிலும் தீ மளமளவென பரவியது.அக்கம்பக்கத்தினர் உடனடியாக உரிமையாளர் ராஜாவுக்கும், பேராவூரணி தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் அளித்தனர். ஆனால் அதற்குள் தொழிற்சாலை முழுவதுமாக தீயில் எரிந்து நாசமானது. தீயணைப்பு படையினர் வந்து அக்கம்பக்கம் தீ பரவாமல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். . இத்தீவிபத்தில் தளவாடப் பொருள்கள், இயந்திரங்கள் என ரூ.10 இலட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த பேராவூரணி வட்டாட்சியர் எல்.பாஸ்கரன், ஆவணம் சரக வருவாய் ஆய்வாளர் இளங்கோவன், தென்னங்குடி கிராம நிர்வாக அலுவலர் இராஜசேகர் உள்ளிட்ட வருவாய்துறை அலுவலர்கள் விபத்து குறித்து விசாரணை நடத்தினர்.
நன்றி:தீக்கதிர்
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top