பேராவூரணி பகுதியைச் சேர்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பேராவூரணி காவல்துறை உதவி ஆய்வாளர் நிதியுதவி..

Peravurani Town
0


பேராவூரணி பகுதியைச் சேர்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய அரசுப் பள்ளி  மாணவர்களுக்கு பேராவூரணி காவல்துறை உதவி ஆய்வாளர் இல.அருள்குமார் செவ்வாய்க்கிழமை  தனது சொந்த பணத்திலிருந்து ரூ. 10 ஆயிரம் நிதியுதவி வழங்கி,  படிப்பில் மேலும் சிறந்து விளங்க வேண்டும் என வாழ்த்தினார் .
பேராவூரணி ஊராட்சி ஒன்றிய வடகிழக்கு தொடக்கப் பள்ளியில் 3 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி கு.அபிநயா,  4ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஹா.ஜெசிமா மற்றும் ஆதனூர் கிழக்கு பள்ளி மாணவர் மனோஜ்குமார்,  மாணவி இரா.தேவகி ஆகிய 4 பேருக்கும் தலா ரூ. 2,500 வீதம் மொத்தம் ரூ. 10 ஆயிரத்தை நிதியுதவியாக வழங்கி மாணவர்களை வாழ்த்தினார். அப்போது, வட்டாரக் கல்வி அலுவலர் கோ.ரவிச்சந்திரன், தலைமை ஆசிரியர்கள் இரா.சித்ரா தேவி,  கு.செல்வி ஆகியோர் உடனிருந்தனர். 

நன்றி: தினமணி

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top