பேராவூரணி ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வேளாம்பட்டி, வாட்டாத்திக் கொல்லைக்காடு, பூவளூர், கொன்றைக்காடு, திருப்பூரணிக்காடு, திருச்சிற்றம்பலம், செருவாவிடுதி, அம்மையாண்டி, ஆவணம், பேராவூரணி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மே தினத்தையொட்டி புதன்கிழமை கொடியேற்றும் விழா நடைபெற்றது.
விழாவில், சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.வாசு, ஒன்றியச்செயலாளர் ஏ.வி.குமாரசாமி மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள், ஆர். மாணிக்கம், வி.ரெங்கசாமி, எம்.இந்துமதி, ஏ. ராஜா முகமது, நகரக்குழு எஸ். ஜகுபர்அலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நன்றி: தினமணி