செங்கமங்கலம் அபிராமி அம்பிகை உடனுறை மார்க்கண்டேஸ்வரர் ஆலயம்.

IT TEAM
0

அபிராமி அம்பிகை உடனுறை மார்க்கண்டேஸ்வரர் ஆலயம்

பேராவூரணி வட்டாரத்தில் செங்கமங்கலத்தில் அமைந்துள்ளது இந்தக் கோயில். இப்பகுதியில் காணப்படும் தொன்மையான வரலாற்றைக் கொண்ட கோயில்களில் இதுவும் ஒன்றாகும். சிதிலமடைந்து இருந்த கோயில் பின்னர் புனரமைப்பு செய்யப்பட்டு குடமுழுக்கு செய்யப்பட்டது. கல்வெட்டுகள் அடிப்படையில் இதன் காலமானது கி.பி.1248 ஆகும்.

௧ட்டிட அமைப்பு
கருவறை, கருவறை முன் மண்டபம், அர்த்த மண்டபம், மகாமண்டபம் ஆகியவைகளை கொண்டுள்ளது. அர்த்த மண்டபத்தில் 8 தூண்கள் காணப்படுகிறது இதில் 6 தூண்கள் பாண்டியர் காலத்தவையாகவும் 2 தூண்கள் சோழர் காலத்தவையாகவும் காணப்படுகிறது இதன்மூலம் இக்கோயில் சோழர் காலத்தில் கட்டப்பட்டு பின்னர் பாண்டியர் காலத்தில் புனரமைக்கப்பட்டிருக்கலாம்.

கல்வெட்டு செய்திகள்:
கருவறை முன் மண்டப தெற்குப்புற அதிட்டானத்தில் காணப்படும் கல்வெட்டில் முதலாம் சடையவர்மன் விக்கிரமபாண்டியன் பெயர் காணப்படுகிறது இதன் காலம் கி. பி. 1248.
இக்கல்வெட்டில் இவ்வூரின் பெயர் கண்டியூரான சோழசிகாமணிபுரம் என்றும் இதன் வளநாடு ஜெயசிங்ககுலகால வளநாடு என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இக்கோயிலின் திருப்பள்ளியெழுச்சிக்கும், திருவமுது படிக்கும், திருவிளக்குச் சந்திக்கும் இறையிலியாக நிலம் கொடுத்தமை பற்றிக் கூறுகிறது. மேலும் பஞ்சமி, செவ்வாய் கிழமை, அசுவதி நட்சத்திரம்

கோயில் கருவறை முன்மண்டப தெற்குப் புறச்சுவரில் காணப்படும் கல்வெட்டில் முதலாம் சடையவர்மன் வீரபாண்டியனின் பெயர் காணப்படுகிறது. வளநாடு ஜெயசிங்ககுலகால வளநாடு என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் காலம் கி. பி. 1259 ஆகும். இத்திருக்கற்றளியின் திருப்பணிக்கு 18 மா நிலத்தை இறையிலியாக கொடுத்த செய்தி காணப்படுகிறது இந்நிலம் மாவடுகுறிச்சியில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

திருநிலைக்காலில் காணப்படும் கல்வெட்டு திருநிலைக்கால் தன்மம் வழங்கிய செய்தியை பற்றி கூறுகிறது

இக்கோயில் கருவறை பின்புற முப்பட்டை குமுதத்தில் காணப்படும் கல்வெட்டில் தானவநாடு என்றும் மனிக்க மாவடுகுறிச்சி என்றும் காணப்படுகிறது. இறையிலியாக நிலம் கொடுத்தமை பற்றியும் அதன் எல்லைகளும் கூறப்பட்டுள்ளது.

இக்கோயில் அர்த்த மண்டப தென்புறப்பட்டியில் முற்றுப்பெறாத கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது திருப்பள்ளி எழுச்சி மற்றும் சந்தி பற்றிய செய்திகள் காணப்படுகிறது.

இக்கோயில் திருநிலைக்கால் முகவுரையில் காணப்படும் கல்வெட்டு திருநிலைக்கால்முகவனை செய்வித்தமை பற்றி கூறுகிறது.

மேலும் ஒரு கல்வெட்டில் கண்டியூர் குளத்தில் மடை எடுப்பித்தது பற்றிய செய்தி காணப்படுகிறது. இதில் தும்மதி வருடம், சித்திரை மாதம் போன்றவை இடம்பெறுகின்றன.

கோயில் சிறப்பு

பிரதோஷம், தேய்பிறை அஷ்டமி போன்ற நாட்களில் கோயில் விஷேசமாக காணப்படும்.

பல வரலாற்றுப் பதிவுகளையும்
சிறப்புகளையும் கொண்டுள்ள இக்கோயில் பல நூற்றாண்டுகள் கடந்து இன்றும் நமக்கு வரலாற்றை உறைத்துக்
கொண்டுதான் இருக்கிறது

- இந்திரஜித் ஜித்தா

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top