பேராவூரணியில் வட்டார வேளாண்மை மையத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை கீழ் செயல்படும் அட்மா திட்டத்தின் கீழ் வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் களப்பணியாளர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.
வேளாண்மை உதவி இயக்குநர்(பொ) ராணி தலைமை வகித்தார். வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் அருண் கலந்து கொண்டு பேசுகையில்,
இந்த சிவப்பு கூன் வண்டு தாக்குதல் செப்டம்பர் லிருந்து டிசம்பர் மாதங்களில் அதிக அளவு தென்னையை தாக்குகின்றன. இதனை கட்டுப்படுத்தும் மாதங்கள் ஜூலை முதல் செப்டம்பர் வரை இந்த சிவப்பு கூன் வண்டு தாக்குவதற்கான காரணங்கள் இயந்திரங்கள் மேற்கொள்ளும் உழவு மேற்கொள்ளும் போது காயங்கள் ஏற்படுவதால். அதிக அளவில் குருத்துகளை தாக்குகின்றன தாக்குவதால் தென்னை மரத்தில் கருப்பு நிற சாறுகள் வருகிறது இதனால் மரங்கள் அதிக அளவில் பாதிக்கின்றது இந்த பாதிப்பு வளர்ந்த மரங்களில் அதிக அளவில் பாதிப்புக்குள்ளாகிறது இதை கட்டுப்படுத்துவதற்கு 5 கிலோ வேப்பம் புண்ணாக்கு ஒரு மரத்துக்கு என்ற அளவில் பயன்படுத்தலாம். இனக்கவர்ச்சி பொறி வைப்பதன் மூலம் இதனை கட்டுப்படுத்தலாம். மேலும் தரமான தென்னங்கன்றுகள் தேர்வு செய்முறை பற்றியும் நீர் மேலாண்மை சொட்டுநீர் பாசன முறைகள் ஒருங்கிணைந்த உரம் மேலாண்மை பற்றியும் விரிவாக பேசினார்.
இதில் வேளாண் அலுவலர் உதவி வேளாண் அலுவலர்கள், வட்டார தொழில்நுட்ப மேலாளர்கள், உதவி தொழில்நுட்ப மேலாளர்கள், பயிர் அறுவடை களப்பணியாளர்கள், உழவர் நண்பர்கள் பண்ணை தகவல் ஆலோசனை குழுக்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட அலுவலர்கள் செல்வி, நெடுஞ்செழியன், சத்யா செய்தனர்.
செய்தி: முனைவர் வேத கரம்சந்த் காந்தி
#peravurani #peravuranitown