பேராவூரணி ஆகஸ்ட்-16,
முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, பழைய பேராவூரணி பெருமாள் கோயிலை சுற்றியுள்ள நந்தவனத்தில் தென்னங்கன்றுகள் நடப்பட்டது. மேலும் ஏழை தொழிலாளிகள் வாழ்வாதாரத்திற்காக, அவர்களது வீட்டிலும் தென்னங்கன்றுகள் நடப்பட்டன. இந்நிகழ்ச்சியில், பேராவூரணி கோக்கனட் சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்க தலைவர் ஏஎஸ்ஏ.தட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார். மண்டல ஒருங்கிணைப்பாளர் எஸ். பாண்டியராஜன், நிர்வாக அலுவலர் குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வில், சங்கர் ஜவான், டிவி குமார் மற்றும் சபரி குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், பழைய பேராவூரணி பெருமாள் கோயில் குருக்கள் ரகு, ரகு பிச்சை மற்றும் பாபு குருக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
முனைவர்
வேத கரம்சந்த் காந்தி செய்தியாளர்