பேராவூரணி டாக்டர்.ஜே.ஸி.குமரப்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் உலக உணவு தின விழா

IT TEAM
0

 


பேராவூரணி, அக் 17

பேராவூரணி டாக்டர்.ஜே.ஸி.குமரப்பா செண்டினரி வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் உலக உணவு தின விழா நடந்தது.






தமிழ்நாடு தனியார் பள்ளிகள் தாளாளர்கள் சங்க நிறுவனத் தலைவர் முனைவர் ஸ்ரீதர் தலைமை வகித்து மாணவர்களிடம் பேசுகையில்,


உலக உணவு தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 16ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாள் உலகம் முழுவதும் உள்ள உணவுப் பற்றாக்குறை, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பட்டியல் அவதிப்படும் மக்கள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது.  அதேபோல் மாறிவரும் உணவுப் பழக்கம் இதனால் உருவாகும் உடல் குறைபாடு மற்றும் வாழ்க்கை முறை ஆகிய விஷயங்களை சுட்டிக்காட்ட இது ஒரு பொன்னான நாள் என்கின்றனர் ஊட்டச்சத்து வல்லுநர்கள்.  இந்த நாளில்  உணவு உற்பத்தி செய்யும் விவசாயிகள் முதல் உணவினை ஏற்றுமதி, இறக்குமதி என வேலை பார்க்கும் அத்தனை பேருக்கும் நன்றி தெரிவிக்கும் நடைமுறையும் கடைப்பிடிக்கப்படுகிறது" என்றார்.


பள்ளி மாணவர்கள் தங்கள் வீட்டில் சமைத்த பொங்கல், பிரியாணி, தயிர் சாதம், சேகரி, வடை ஆகிய உணவுகளை சகா மாணவர்களுடன் சாப்பிட்டனர். மேலும் பேராவூரணி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள டாக்டர்கள், நோயாளிகள், பணியாளர்கள் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.


இதில் பள்ளி நிர்வாக இயக்குநர் நாகூர்பிச்சை, குமரப்பா அறக்கட்டளை பொருளாளர் அஸ்வின்கணபதி, முதல்வர் சர்மிளா, ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


முனைவர் 

வேத கரம்சந்த் காந்தி செய்தியாளர்

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top