தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஊராட்சி ஒன்றிய மேற்கு தொடக்கப்பள்ளிக்கு, இரு வகுப்பறை கட்டடம், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.31 லட்சத்தில் கட்டப்படுகிறது.
இதற்கான அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை காலை சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது. நடைபெற்ற நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினர் கட்டடப் பணிக்கு அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் கு.திராவிட செல்வம், பேராவூரணி திமுக நகரச் செயலாளர் என். எஸ்.சேகர், பேராவூரணி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வேந்திரன், தவமணி, வட்டாரக் கல்வி அலுவலர்கள் அங்கயற்கண்ணி, கலாராணி, பள்ளி தலைமையாசிரியர் விஜயலெட்சுமி, பேராவூரணி பேரூராட்சி உறுப்பினர்கள் ஆனந்தன், முகிலன், பள்ளி மேலாண்மைக்குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம், மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
முனைவர் வேத கரம்சந்த் காந்தி செய்தியாளர்