பேராவூரணி தாலுக்கா ஆதனூர் கிராமத்தில் வருகிற வெள்ளிக்கிழமை, ஆதனூர் இளைஞர்களால் நடத்தப்படுகிற கபாடி போட்டி நடைபெற இருக்கிறது. இந்த கபாடி போட்டிக்கு முதல் பரிசாக ரூபாய் பத்தாயிரம் மற்றும் சூழல் கோப்பை, இரண்டாவது பரிசாக ரூபாய் 8000 மற்றும் சூழல் கோப்பை, மூன்றாவது பரிசாக ரூபாய் 6 ஆயிரம் மற்றும் சுழல் கோப்பை நான்காவது பரிசாக ரூபாய் 4000 மற்றும் சுழல் கோப்பை வழங்கப்பட இருக்கிறது. நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக இளம் தொழிலதிபர் மற்றும் வீரக்குறிச்சி மேக்ஸ் அருள் பவுண்டேஷன் நிறுவனர் எஸ். அருள் சூசை வருகை தந்து சிறப்பிக்க இருக்கிறார். மழை வந்தாலும் போட்டியினை நடத்த ஏதுவாக, பெரிய அளவில் மைதானம் முழுவதும் செட் அமைத்து, கபடி போட்டி நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, ஆதனூர் கிராமத்தார்கள் மற்றும் இளைஞர்கள் செய்து வருகின்றனர்.
முனைவர் வேத கரம்சந்த் காந்தி செய்தியாளர்