கீரமங்கலத்தில் நடைபெற்ற JCI INDIA மண்டலம் 23 வட்டாரம் A ஜேசிஐ கீரமங்கலம் சென்ட்ரல் கிளை இயக்கத்தின் புதிய பொறுப்பாளர்கள் கூட்டத்தில், 19 ம் ஆண்டின் தலைவராக Jc.R.பாலாஜி, செயலாளராக Jc.S.ஜெயபிரபு, பொருளாளராக Jc.J.ராஜுவ்காந்தி ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர். நிகழ்வில்,
ஜேசிஐ கிளை இயக்கத்தின் முன்னாள் தலைவர்கள், ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்கள், கிளை இயக்க உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், அரசு ஊழியர்கள், நீரின்றி அமையாது உலகு அமைப்பு நண்பர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மேலும் நிகழ்வில் குருகுலம் பள்ளி மாணவிகள் கலை நிகழ்ச்சிகள் மூலம் விழாவை சிறப்பித்தனர்.