பேராவூரணியில் நூல் வெளியீட்டு விழா

IT TEAM
0


தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி தனம் மஹால் மண்டபத்தில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, தஞ்சை

 மாவட்டத் தலைவர்களில் ஒருவரான, தோழர் பா.பாலசுந்தரம் எழுதிய, 'மட்டைக் கஞ்சி' என்ற சிறுகதை நூல் வெளியீட்டு விழா, கலை இலக்கிய பெருமன்ற ஒன்றியத் தலைவர் ஜெ.செல்வகுமார் தலைமையில் நடைபெற்றது.


விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலாளர் எம்.சித்திரவேல் வரவேற்றார். சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் மா.கோவிந்தராசு முன்னிலை வகித்தார். 

திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினரும், பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினருமான நா.அசோக்குமார் நூலை வெளியிட, கவிக்குயில் மருத்துவர் மு.செல்லப்பன் பெற்றுக் கொண்டார். 


இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் செங்கோடன், வர்த்தக சங்க கட்டுப்பாட்டு கமிட்டி உறுப்பினர் எஸ்.கந்தப்பன், வர்த்தக சங்க தலைவர் ஆர்.பி.ராஜேந்திரன், தொழிலதிபர் ஹெச்.சம்சுதீன், பெரியார் அறக்கட்டளை உறுப்பினர் வை.சிதம்பரம், மெய்ச்சுடர் நா.வெங்கடேசன், தொழிலதிபர் எஸ்.பி.சுந்தரமூர்த்தி, ஆயர் த.ஜேம்ஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினர். சி.துரைமாணிக்கம் சிறப்புரையாற்றினார். நிறைவாக நூலாசிரியர் பா.பாலசுந்தரம் ஏற்புரையாற்றினார்.


நிகழ்ச்சியில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திக, திமுக, மதிமுக மற்றும் பல்வேறு கட்சிகள், அமைப்புகளின் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top