அளஞ்சிரங்காடு குருகுலம் உயர்நிலைப் பள்ளியில், ஒன்பதாம் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு, பள்ளியின் தாளாளர் சிவனேசன் தலைமை வகித்தார். கீரமங்கலம் பேரூராட்சி துணைப் பெருந்தலைவர் முத்தமிழ்செல்வி தமிழ்மாறன், தேசிய கொடி ஏற்றி வைத்தார். விநாயகா கம்ப்யூட்டர் உரிமையாளர் மற்றும் கேசிசி கிரிக்கெட் கிளப் தலைவர் சந்திரசேகர், ஒலிம்பிக் கொடி ஏற்றி வைத்தார். தேசிய வீல்சேர் பேஸ்கட்பால் பிளேயர் சுபாஜா பள்ளியின் கொடியை ஏற்றி வைத்தார். சர்வதேச பாரா ஒலிம்பிக் வாலிபால் வீராங்கனை சங்கீதா, ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைத்தார். மாநில சாதனையாளர் மற்றும் பாரா ஒலிம்பிக் தங்கப் பதக்க வெற்றியாளர் கலைச்செல்வம் விளையாட்டு விழாவை துவக்கி வைத்தார். விழாவில் மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.