பேராவூரணி, ஜன 30
பேராவூரணியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் 75வது குடியரசு தினத்தை முன்னிட்டு இரத்த தான முகாம் நடந்தது. மாவட்ட செயலாளர் ரியாஸ் தலைமை வகித்தார், கிளைத் தலைவர் முகமதுகனி முன்னிலை வகித்தார். இம்முகாமை தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மாவட்ட குருதி பரிமாற்று அலுவலர் கிஷோர், இரத்த வங்கி ஆலோசகர் கண்ணன் ஆகியோர் நடத்தினர். மருத்துவ குழு, முகாமில் கலந்து கொண்ட ஆண்கள், பெண்கள் ஆகியோரிடம் இருந்து, மருத்துவர்களின் உரிய ஆலோசனை பெற்று உடல் தகுதி அடிப்படையில் 56 யூனிட் தானமாக பெறப்பட்ட இரத்தம் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் நிர்வாகிகள் அஜீஸ், அல்லாஹ்பிச்சை, சபி, சேக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.