பேராவூரணி, ஜன 12
பேராவூரணி அருகே வாத்தலைக்காடு கிராமத்தில் உள்ள ஸ்ரீகற்பக விநாயகர் கோயிலில் ஸ்ரீ அனுமன் ஜெயந்தி மஹாயாகம் நடந்தது.
ஸ்ரீசர்வசித்தி ஆஞ்சநேயருக்கு மூலமந்திர மஹாயாகம், கோபூஜை, 108 தன்வந்திரி மூலிகை பொடி அபிஷேகம், வெற்றிலை மாலை, வடை மாலை மற்றும் வெண்ணை சாற்றி சிறப்பு அர்ச்சனை வழிபாடுகள், கூட்டு வழிபாடுகள், மஹா தீபாராதனை நடைபெற்றது. மேலும் அன்னதானம் நடந்தது. சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை வாத்தலைக்காடு கிராமத்தார்கள் செய்திருந்தனர்.