தஞ்சாவூர், பிப்.9 -
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில், தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலை துறை சார்பில், ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், முசிறி - குளித்தலை - புதுக்கோட்டை - ஆலங்குடி - பேராவூரணி -
சேதுபாவாசத்திரம் மாநில நெடுஞ்சாலையில்,
பூனைகுத்தியாற்றின் குறுக்கே, ரூ.8 கோடியே 37 லட்சத்து 41 ஆயிரம் மதிப்பீட்டில்,
உயர்மட்டப்பாலம் 12 மீட்டர் அகலம், 71 மீட்டர் நீளத்திலும் அமைக்கப்பட உள்ளது.
இதற்கான கட்டுமானப் பணி துவக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமை வகித்து அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார். நெடுஞ்சாலைத்துறை (திட்டங்கள் அலகு) உதவிப் பொறியாளர் அன்சாரி ராஜா முன்னிலை வகித்தார்.
இதில், திமுக ஒன்றிய செயலாளர்கள் க.அன்பழகன், இளங்கோ, முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் என்.செல்வராஜ், திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் அ.அப்துல் மஜீத், திமுக நகரச் செயலாளர் என்.எஸ்.சேகர், தஞ்சை ராஜசேகர், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள் சுவாதி காமராஜ், அலிவலம் அ.மூர்த்தி, இலக்கியா நெப்போலியன்,
சேதுபாவாசத்திரம் ஒன்றியக் குழு துணைத் தலைவர் முத்துலட்சுமி காளிமுத்து, பேராவூரணி பேரூராட்சி துணைத் தலைவர் கி.ரெ.பழனிவேல், பேரூராட்சி கவுன்சிலர்கள், குழ.செ.அருள்நம்பி, ராஜ்மோகன், அச்சகம் கோ.நீலகண்டன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.