தஞ்சாவூர், பிப்.8 -
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேருந்து நிலையம் அருகே, 'ழ' பவுண்டேசன் சார்பில், போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையம் திறப்பு, இயற்கை விவசாயிகள் லீக் போட்டி பரிசளிப்பு விழா நடைபெற்றது.
இலவச பயிற்சி மையத்தை திறந்து வைத்து, குத்து விளக்கேற்றி வைத்து பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார், ஓய்வு பெற்ற கடலூர் ஆட்சியர் வெ.அன்புச் செல்வன், பயிற்சி துணை ஆட்சியர் விஷ்ணுபிரியா ஆகியோர் சிறப்புரையாற்றினர். திருப்பூர் விக்னேஷ் நோக்கவுரையாற்றினார்.
இதில், வெங்கடேஷ்வரா கல்விக் குழுமத் தலைவர் டாக்டர் ஜீவகன் அய்யநாதன், பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் இரா.திருமலைச்சாமி வாழ்த்திப் பேசினர்.
நிகழ்ச்சியில், திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் அ.அப்துல் மஜீத், மாவட்ட அவைத்தலைவர் சுப.சேகர், மாவட்ட கவுன்சிலர்கள் இலக்கியா நெப்போலியன், அலிவலம் மூர்த்தி, வழக்குரைஞர் குழ.செ.அருள்நம்பி, மருத்துவர் சந்திரசேகர், விளையாட்டு மேம்பாட்டு அணி பட்டுக்கோட்டை விஜயகுமார், நடராஜன், பன்னீர்செல்வம், நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.