பேராவூரணி கே.கே. நகர் பகுதியில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் உள்ளன. இப்பகுதியில் மின்விநியோகம் அடிக்கடி தடைபட்டு வந்தது. இந்நிலையில் சீரான மின்வினியோகம் வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அறிவுறுத்தலின்படி, மின் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், கே.கே நகர் பகுதியில், புதிதாக 100 கிலோவாட் மின் மாற்றி ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டது. இதனை செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். மின்வாரிய உதவி செயற்பொறியாளர் எஸ். கமலக்கண்ணன், உதவி மின் பொறியாளர் ஹரி சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் அ.அப்துல் மஜீத், சுரேஷ், வழக்குரைஞர் ஏகாம்பரம், சாமியப்பன், கான் முகமது, மின்வாரிய ஆக்க முகவர் ஆர்.சுரேஷ், மின்பாதை ஆய்வாளர்கள் கே.செல்வராஜ்,
கே.ரவிச்சந்திரன், கேங்க்மேன் ஆர்.ரஞ்சித்,
எம்.குபேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.