அறந்தாங்கி குருகுலம் உயர்நிலைப் பள்ளியில், மாணவர்களுக்கு தண்ணீர் தேவையின் அவசியத்தை உணர்த்தும் வகையில், நீர் நிலைகளுக்கு நேரடியாக அழைத்துச் சென்று களவிளக்கம் அளிக்கும் பயிற்சி, ஒன்பதாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு அளிக்கப்பட்டது. இதன் மூலம் மாணவ மாணவிகள் தண்ணீர் சேமிப்பின் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் நேரடியாக அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது. மேலும் குருகுலம் பள்ளி வளாகத்தில் உள்ள மரங்களுக்கு, நாளொன்றுக்கு தேவைப்படும் 9000 லிட்டர் நீர், பூமியிலிருந்து நேரடியாக எடுக்காமல், பயன்படுத்தப்பட்ட நீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.