பேராவூரணி, பிப் 6
பேராவூரணி அருகே ஆவணம் டாக்டர் கலாம் பார்மசி கல்லூரியில் தஞ்சாவூர் மாவட்ட சதுரங்க அசோசியேசன், பட்டுகோட்டை லயன்ஸ் கிளப் ஆப் குயின் சிட்டி இணைந்து மாநில அளவிலான சதுரங்க விளையாட்டுப் போட்டி நடந்தது.
கல்லூரியின் சேர்மன் ஜெயசீலன் தலைமை வகித்தார். நிர்வாக பிரதிநிதி அஜித்டேனியல் சதுரங்க விளையாட்டு போட்டியை துவக்கி வைத்தார். கலாம் பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் மதிவாணன் வரவேற்றார்.
சதுரங்க விளையாட்டுப் போட்டியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 450க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள கேடயமும், பரிசு தொகையும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தஞ்சாவூர் ஸ்ரீகாமாட்சி மெடிக்கல் சென்டர் மேனேஜிங் டைரக்டர் டாக்டர் இனியன், பட்டுக்கோட்டை முன்னாள் நகர்மன்ற தலைவர் ஜஹவர்பாபு வழங்கினர். மேலும் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
இதில் லயன்ஸ் கிளப் தலைவர் சுந்தர்பாபு, செயலாளர் லட்சுமிகாந்தன், பொருளாளர் பிரகாஷ், தஞ்சாவூர் செஸ் அசோசியேசன் தலைவர் செந்தில்குமரன், செயலாளர் சிலம்பரசன், பொருளாளர் வினோத், பார்மசி கல்லூரியின் முதல்வர் அன்பழகன், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பாலிடெக்னிக் கல்லூரியின் துணை முதல்வர் கணேசன் நன்றி கூறினார்.