பேராவூரணி அமிழ் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் ஆண்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா

IT TEAM
0

 


பேராவூரணி அமிழ் ஸ்போர்ட்ஸ் அகாடமியில், ஆண்டு விழா மற்றும் விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு,  அகாடமியின் தலைவர் முனைவர் வேத.கரம்சந்த் காந்தி தலைமை வகித்தார். அகாடமி நிறுவனர் மருத உதயகுமார் ஆண்டறிக்கை வாசித்தார். பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் என்.அசோக்குமார், அகாடமியின் ஆண்டு மலர் வெளியிட்டு, வாழ்த்துரை வழங்கினார். விழாவில், மேக்ஸ் அருள் பவுண்டேஷன் நிறுவனர் தொழிலதிபர் அருள்சூசை, பேராவூரணி பேரூராட்சி பெருந்தலைவர் சாந்தி சேகர், பட்டுக்கோட்டை வட்டாட்சியர் சுகுமார், தஞ்சாவூர் பாரத ஸ்டேட் வங்கியின் முதன்மை மேலாளர் சூரியேந்திரன், குருவிக்கரம்பை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் நல்லாசிரியர் மனோகரன், சேசு கல்லூரி உடற்கல்வி இயக்குனர் முனைவர் பாலாஜி, தேசிய விளையாட்டு வீரர்கள் அப்துல் காதர், ஸ்ரீதரன், ராஜா, ஜீவா மற்றும் ஜனரஞ்சனிஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து வாழ்த்தி பேசினர். விழாவில், ஆண்டு விழா விளையாட்டுப் போட்டிகளில் பரிசு பெற்ற குழந்தைகளுக்கும், பெற்றோருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில், திருக்குறள் பேரவை, ஆதனூர் லெனின் கிளப்பு நண்பர்கள், பேரை துளிர் நண்பர்கள் அறக்கட்டளை, உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர். அகாடமி விளையாட்டு வீரர்களும் பெற்றோர்களும் திரளாக கலந்து கொண்டனர்.  முன்னதாக அகாடமியின் பொருளாளர் நெடுவாசல் ராம்குமார் வரவேற்புரையாற்ற, செயலாளர் காஜா முகையதின் நன்றி கூறினார்

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top