பேராவூரணியில், அஇஅதிமுக நகரச் செயலாளர் எம்.எஸ்.நீலகண்டன் அவர்களின் முயற்சியில், அஇஅதிமுக நிர்வாகிகள் ஒத்துழைப்பில், கடும் வெப்பத்தை தணிக்கும் வகையில் பொது மக்களுக்கு இலவச நீர்மோர் வழங்கும் முகாமை தொடங்கி, இன்று 17 வது நாளாக தொடர்ந்து எவ்வித தொய்வும் இல்லாமல் நீர்மோர் வழங்கி மக்களின் தாகத்தை தனித்து வருகின்றனர். பேராவூரணி நகர அஇஅதிமுகவினரின் இந்த தொண்டினை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.