தஞ்சாவூர், ஜூன்.21 -
தஞ்சை மாவட்டம், பேராவூரணி தனம் திருமண மஹாலில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஸ் ராவத் உத்தரவின் பேரில், பட்டுக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் பாஸ்கர் மேற்பார்வையில், காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.
இதில், காவல் ஆய்வாளர்கள் பசுபதி (பேராவூரணி), சேரன் (திருச்சிற்றம்பலம்), ஆனந்தராஜ் (சேதுபாவாசத்திரம்) மற்றும் உதவி ஆய்வாளர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர்கள், தனிப்பிரிவு காவல்துறையினர் கலந்து கொண்டனர்.
இந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 56 மனுக்கள் பெறப்பட்டன. இதில், குடும்ப பிரச்சினை, இடப்பிரச்னை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளுக்கு இருதரப்பினரையும் அழைத்துப் பேசி தீர்வு காணப்பட்டது. மேலும் நிலுவையில் உள்ள மனுக்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது.