தஞ்சாவூர், ஜூன்.21 -
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள ஆண்டிக்கச்சல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் 66 பேருக்கு, பேராவூரணி ரெஜினா புக் சென்டர் நிறுவனத்தின் சார்பில் நோட்டுப் புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.
புத்தக நிலைய உரிமையாளர் முகமது ரபிக் ஏற்பாட்டில், பேராவூரணி பேரூராட்சி கவுன்சிலர் முருகேசன், புத்தக நிலையம் மேலாளர் சம்சுல் ஹுதா ஆகியோர் மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்களை வழங்கினர்.
நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமை ஆசிரியர் அன்பு மேரி தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மை குழு தலைவி நா.பரிமளா முன்னிலை வகித்தார். நிறைவாக ஆசிரியர் நீலகண்டன் நன்றி கூறினார்.