பேராவூரணி கோகனட்சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கம் சார்பாக, சோழநாடு கிராமப்புற விளையாட்டு அறக்கட்டளைக்கு நிதியுதவி வழங்கப்பட்டது. பேராவூரணி பகுதியில், கிராமப்புற எளிய மாணவ மாணவிகளின் திறனை அறிந்து, அவர்களை விளையாட்டு துறையில் பயிற்றுவித்து, தமிழகத்தின் புகழ்பெற்ற கல்லூரிகளில் படிப்பதற்கு வாய்ப்பு ஏற்படுத்தி தந்துவருகிற, சோழநாடு கிராமபுற அறக்கட்டளை யின் கெயின் ஸ்போர்ட்ஸ் அகாடமிக்கு உதவிட வேண்டும் என்று முடிவு செய்து, எளிய நிகழ்வில் ரூபாய் பத்தாயிரம் நிதி உதவி வழங்கப்பட்டது. நிகழ்வுக்கு, பேராவூரணி கோக்கனட்சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கத்தின் தலைவர் நா.ப.ரமேஷ், செயலாளர் ஜி.குமரன் மற்றும் பொருளாளர் அ. ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டாரத் தலைவர் எஸ். பாண்டியராஜன், எஸ்.கலைத்தம்பி மற்றும்
சி.பிரதீஸ் ஆகியோர் இணைந்து ரூபாய் பத்தாயிரம் வழங்கினர். அறக்கட்டளை சார்பில், உடற்கல்வி ஆசிரியர் நீலகண்டன் நன்றி கூறினார்.