தேசிய மருத்துவர் தினத்தில் மருத்துவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்த தனியார் பள்ளி மாணவர்கள் - நெகிழ்ந்து நன்றி சொன்ன மருத்துவர்

IT TEAM
0

 


தஞ்சாவூர், ஜூலை.1 - 

தேசிய மருத்துவர் தினமான திங்கள்கிழமையன்று, தனியார் பள்ளி மாணவர்கள் மருத்துவர்கள் போல் உடையணிந்து மருத்துவர் ஒருவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இதனால் நெகிழ்ச்சி அடைந்த மருத்துவர் அவர்களுக்கு இனிப்பும், புத்தகங்களும் வழங்கி நன்றி தெரிவித்தார். 


தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் குமரப்பா வித்யாலயா என்ற தனியார் பள்ளி உள்ளது. இங்குள்ள மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இரண்டு பள்ளி வேன்களில் சென்று, பேராவூரணியைச்  சேர்ந்த பிரபல மருத்துவரும், மருத்துவத்துறை சம்பந்தமான நூல்களை எழுதியவரும், எழுத்தாளருமான டாக்டர் துரை.நீலகண்டன் என்பவரை அவரது மருத்துவமனையில் சந்தித்து, நினைவுப்பரிசு வழங்கி, தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்களை தெரிவித்தனர். அப்போது சில பள்ளிக் குழந்தைகள் மருத்துவர் போல் உடை அணிந்து இருந்தனர். 


தனது பணியில் பிஸியாக இருந்த மருத்துவர் குழந்தைகளின் வாழ்த்தால் நெகிழ்ச்சி அடைந்தார். இதையடுத்து குழந்தைகளுக்கு அவர் மிட்டாய் மற்றும் தான் எழுதிய நூல்களை வழங்கி தனக்கு வாழ்த்து தெரிவித்ததற்கு நன்றி தெரிவித்தார்.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top