புத்தக வாசிப்பு விழிப்புணர்வு திருவிழா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று புத்தக வாசிப்பு திருவிழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு தலைமை ஆசிரியர் மாரிமுத்து அவர்கள் தலைமை வகித்தார். வாசகர் வட்டத்தலைவர் ஸ்டீபன்ராஜ் முன்னிலை வகித்தார். பேராவூரணி இரண்டாம் நிலை நூலகர் வரவேற்றார். பேராவூரணி முழு நேர கிளை நூலகத்தில் நூல் வாசிப்பின் அவசியத்தை வழியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களிடையே நூல் வாசிப்பு அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது. இந்நிகழ்வில் வாசகர் வட்ட தலைவர் ஸ்டீபன்ராஜ், "நீ தலை குனிந்து புத்தகம் படித்தால் வாழ்க்கையில் தலை நிமிர்ந்து நடப்பாய் எனவே நூல் வாசிப்பு அவசியம்" என கூறினார். இதில் உதவி தலைமைஆசிரியர் சோழபாண்டியன், கணித ஆசிரியர் சற்குணம்,
தமிழசிரியர்கள் மூர்த்தி, சரவணன், இடைநிலை ஆசிரியர் .கலைவாணி ,மற்றும் ஆசிரியர்களும், மாணவர்களும், நூலகர் இரா .சித்ரா ,பணியாளர் பாண்டீஸ்வரி, நிருபர் திருஞானம் மற்றும் பொதுமக்களும், ஆர்வமுடன் கலந்து கொண்டனர். கிளை நூலக இரண்டாம் நிலை நூலகர் ஶ்ரீவெங்கட்ரமணி அனைவருக்கும் நன்றி கூறினார்.