தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி காமராஜர் அரசு மருத்துவமனைக்கு தனியார் நிதி நிறுவனம் சார்பில், ரூபாய் 2 லட்சத்து 68 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டில், பீரோ, பிளாஸ்டிக் சேர் ஆகியவை வழங்கப்பட்டது.
கிரெடிட் அக்சஸ் கிராமின் லிமிடெட் நிதி நிறுவனத்தின் சார்பில், பேராவூரணி காமராஜர் அரசு மருத்துவமனைக்கு நோயாளிகள் பயன்படும் வகையில் ஸ்டீல் பீரோ, ஸ்டீல் ராக், ஸ்டீல் பெஞ்ச், பிளாஸ்டிக் மற்றும் பயிற்சி ஆகியவற்றை கிரெடிட் அக்சஸ் கிராமின் லிமிடெட் மற்றும் கிரெடிட் அக்சஸ் இந்தியா பவுண்டேஷன் நிறுவனம் சார்பில், அதன் கோட்ட மேலாளர் முருகன், வட்டார மேலாளர் ஜோதிமணி, ஒருங்கிணைப்பாளர்கள் விஜயகுமார் மோகன், யோகராஜ், தங்கதுரை, ஆகியோர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் காமேஸ்வரி தேவி மற்றும் மருத்துவர்கள் பாலகுமார், சினேகா பிரியதர்ஷினி ஆகியோரிடம் வழங்கினர்.
இந்நிகழ்வில், நிறுவன பணியாளர்கள் வெங்கடேஷ், கணேஷ் குமார், ரமேஷ், காளிமுத்து, சித்ரா, புவனேஸ்வரி, ராதிகா, ஷாலினி, ரேணுகா, மீனா, கோமதி, சண்முகி மற்றும் செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.