தஞ்சாவூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பொறுப்பேற்றிருக்கும் ஆர்.அண்ணாதுரை அவர்களை, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தஞ்சாவூர் மாவட்டக் கிளை சார்பில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. முதன்மைக் கல்வி அலுவலருக்கு, மாவட்டக் கிளையின் சார்பில் மாவட்டச் செயலாளர் செ.இராகவன்துரை பயனாடை அணிவித்தார். இந்நிகழ்வில், பட்டுக்கோட்டை மதுக்கூர் வட்டாரங்களைச் சார்ந்த கோரிக்கைகள் சார்பாகவும்,மதிப்புமிகு மாவட்ட ஆட்சியர் அவர்களால் நடத்தப்பட உள்ளதாக புலனத்தின் வாயிலாக தகவல் பரவிவரும் இடைநிலை ஆசிரியர்கள் கலந்தாய்வுக் கூட்டம் சார்ந்தும் பேசப்பட்டது. கோரிக்கைகள் சார்ந்து நீண்டநேரம் உரையாடிய முதன்மைக்கல்வி அலுவலர், ஆசிரியர் நலன்சார்ந்தும் மாணவர்நலன் சார்ந்தும் பேசினார். மாநில நல்லாசிரியர் விருதான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதினைப்பெற்ற மாவட்ட பொருளாளர் ந.நாகராஜன், முதன்மை கல்வி அலுவலருக்கு பயனாடை அணிவித்து வாழ்த்து பெற்றார்.இந்நிகழ்வில் மாநில செயற்குழு உறுப்பினர் ச.துரைப்பாண்டி, மாநில பொதுக்குழு உறுப்பினர் கு.சகிலா, மாவட்டத் துணைச் செயலாளர் தகு.சௌந்தர்ராஜன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் து.டேனியல், மேனாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் க.நீலகண்டன், மேனாள் மாவட்ட துணை தலைவர் திரு கு.கிருஷ்ணமூர்த்தி, பேராவூரணி வட்டார செயலாளர் சி.லெட்சுமணசாமி, திருவையாறு வட்டார செயலாளர் மா.நாகராஜன், வட்டார பொருளாளர் வி.சுதாகரன், பேராவூரணி வட்டார பொருளாளர் ச.செல்லதுரை, சேதுபாவாசத்திரம் பரமசிவம், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.