சேதுபவாசத்திரம் தெற்கு ஒன்றியம் குப்பத்தேவன் ஊராட்சி மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சுமதி காளிமுத்து வீடு திடீரென தீப்பிடித்து முற்றும் முழுதாக எரிந்து பொருட்கள் அனைத்தும் சேதமடைந்தது. தகவல் அறிந்த அஇஅதிமுக சேதுபவாசத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளர் K.S.அருணாச்சலம் தலைமையில் கட்சி உறுப்பினர்கள் மற்றும் பேராவூரணி தெற்கு ஒன்றிய செயலாளர் கோவி.இளங்கோ, பெருமகளூர் பழனியப்பன், சேதுபவாசத்திரம் வடக்கு ரா.க.செல்வகுமார், பேராவூரணி மாவட்டபிரதிநிதி கோ.ப.ரவி, செந்தலை ஊராட்சி மன்ற தலைவர் முகமதுரபிக், சேதுபவாசத்திரம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சமயமுத்து, உன்னால் கூட்டுறவு சங்கத் தலைவர் நடராஜன், கிளைச் செயலாளர் ஏசுநாதன், அடக்கத்தேவன் கருப்பையா, ஆனந்தன், வல்லவன்பட்டினம் சீனிதாசன், சோலைக்காடு கருணாகரன், விளாங்குளம் ரஞ்சித், கருப்பட்டிகாடு நீலகண்டன், திருவத்தேவன் சந்திரகாசன், ஆண்டிக்காடு பாலு, பள்ளத்தூர் சுரேஷ், வேலு சேர்வை உள்ளிட்ட அஇஅதிமுக முன்னோடிகளும் நிர்வாகிகளும் நேரில் சென்று ஆறுதல் கூறி, அரிசி மற்றும் நிதி வழங்கி உதவி செய்தனர். இவற்றில் எரிந்து போன முக்கிய ஆவணங்கள் கிடைப்பதற்கான ஏற்பாடுகள் செய்து தருவதாக உறுதி அளித்தனர்.
தீ விபத்தில் வீடு சேதம் அடைந்த குடும்பத்திற்கு அஇஅதிமுக ஒன்றிய செயலாளர்கள் நேரில் ஆறுதல்
அக்டோபர் 20, 2024
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க