மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதனூர் கிளை மாநாடு நடைபெற்றது. கிளை மாநாட்டிற்கு, ஜாக்குலின் தலைமை அமைத்தார். மேலிட பார்வையாளர்களாக தஞ்சை மாவட்ட செயற்குழு கோ.நீலமேகம், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட தலைவர் செந்தில்குமார் மற்றும் தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் என்.வி.கண்ணன், ஒன்றிய செயலாளர் ரெங்கசாமி ஆகியோர் கலந்து கொண்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நோக்கங்கள், கம்யூனிஸ சித்தாந்தத்தின் இன்றைய தேவைகள், உழைப்பாளர்களுக்கான கட்சியின் தேவைகள் குறித்து விரிவாக பேசினர். கிளை மாநாட்டில், கிளையின் புதிய செயலாளராக முனைவர் வேத கரம்சந்த் காந்தி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநாட்டில், 17-வது வார்டின் கிளை சாலைகளில், படர்ந்து கிடக்கும் மரக்கிளைகளை அகற்றிடவும், தெரு நாய்களை கட்டுப்படுத்திடவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இறுதியாக, புதிய கிளைச் செயலாளர் முனைவர் வேத கரம்சந்த் காந்தி நன்றி கூறினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதனூர் கிளைச் செயலாளராக முனைவர் வேத கரம்சந்த் காந்தி தேர்வு
அக்டோபர் 20, 2024
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க