பேராவூரணி கோக்கனட்சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கம் சார்பில் தூய்மை பணியாளர்களுடன் தீபாவளி கொண்டாட்டம் நடைபெற்றது. விழாவிற்கு சங்கத் தலைவர் நா.ப.ரமேஷ் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட தலைவர் பாலசுப்ரமணியன், சாசன செயலாளர் ஜெய்சங்கர், சாசன பொருளாளர் மைதீன் பிச்சை மற்றும் சங்க பொருளாளர் க.குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட நிர்வாக அலுவலர் டாக்டர் ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழாவிற்கு, பேராவூரணி பேரூராட்சி பெருந்தலைவர் சாந்தி சேகர், பேராவூரணி பேரூராட்சி செயல் அலுவலர் ஆர். ராஜா, மண்டல தலைவர் மினியாஸ், மாவட்ட இணைப் பொருளாளர் எம் நீலகண்டன், வட்டாரத் தலைவர் எஸ்.பாண்டியராஜன், மாவட்டத் தென்னை வளர்ச்சி குழு தலைவர் லெ.க.இளங்கோ மற்றும் மாவட்ட காந்தி ஜெயந்தி தலைவர் ஏஎஸ்ஏ.தட்சிணாமூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவில், 75 தூய்மை பணியாளர்களுக்கு இனிப்பு மற்றும் புத்தாடைகள் வழங்கப்பட்டது. நிகழ்வில், சங்கத்தின் முன்னாள் செயலாளர்கள் டிவி குமார், எம்எஸ்.ஆறுமுகம், ருத்ர சிந்தாமணி பிரசிடெண்ட் நடராஜன், முன்னாள் பொருளாளர் பன்னீர்செல்வம் முதல் நிலை தலைவர் ராஜ்குமார், சங்க உறுப்பினர்கள் ராமச்சந்திரன், கதிரவன், ராஜசேகர், பெரியசாமி, சங்கத்தின் புதிய உறுப்பினர் கணபதி, முத்துவேல் மற்றும் லயன்ஸ் சங்க பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் திரளாக கலந்து கொண்டனர். நிறைவாக சங்க செயலாளர் க.குமரன் நன்றி கூறினார்.