தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள கொன்றைக்காடு அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள், தஞ்சாவூர் வருவாய் மாவட்ட அளவில் நடைபெற்ற
கோ கோ போட்டியில் இரண்டாம் இடம் பெற்றனர்.
இந்த போட்டியானது தஞ்சாவூர் நவபாரக் மெட்ரிக் பள்ளியில் அக்.21 அன்று நடைபெற்றது. இதில் 17 வயதுக்கு உட்பட்ட மாணவர் பிரிவில் 10 அணிகள் கலந்து கொண்டன. அதில், விசித்ரன் தலைமையிலான கொன்றைக்காடு பள்ளி மாணவர்கள் அணி மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பிடித்து வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்கள், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் கா.அமுதவல்லி, சு.சங்கீதா ஆகியோரை பள்ளி தலைமையாசிரியர் (பொறுப்பு) சு.குமரேசன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் எஸ்.கே. ராமமூர்த்தி, பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் வி.கவிதா ஆகியோர் பாராட்டினர்.