பேராவூரணியில், மின்வாரிய மேற்பார்வையாளர்களுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு சிறப்பு வகுப்பு நடைபெற்றது. நிகழ்வுக்கு, பேராவூரணி உதவி செயற்பொறியாளர் எஸ் கமலக்கண்ணன் தலைமை வகித்தார். உதவி பொறியாளர்கள் பேராவூரணி நகர் என்.ஹரி சங்கர், திருச்சிற்றம்பலம் திருச்செல்வம், பூக்கொல்லை பிரபாகரன் மற்றும் நாடியம் சிவசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மழைக்காலங்களில் மின் பணியாளர்களை பாதுகாப்பான முறையில் பணியாற்ற செய்யும் நுட்பங்கள் குறித்தும், மின் பணியாளர்களுக்கான பாதுகாப்பு வழிமுறைகள் குறித்தும், அவர்களை பாதுகாப்பாக வழி நடத்துவது குறித்தும் மேற்பார்வையாளர்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. நிகழ்வில் மின்பாதை ஆய்வாளர்கள், ஃபோர்மேன் ஆகியோர் கலந்து கொண்டனர்.