சேதுபாவாசத்திரம் அருகே ரூ.23.45 லட்சம் மதிப்பீட்டில் நியாய விலைக் கடை கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா - எம்எல்ஏ என்.அசோக்குமார் துவக்கி வைத்தார் தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், மருங்கப்பள்ளம் ஊராட்சி, சாந்தாம்பேட்டையில் புதிய அங்காடிக் கட்டிடம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டிலும், அழகியநாயகிபுரம் ஊராட்சி கரிசவயல் பகுதியில், நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, பொது விநியோகக்கட்டிடம் ரூபாய் 13.45 லட்சம் மதிப்பீட்டிலும் கட்டப்பட உள்ளது. இதற்கான பணிகளை, சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழு தலைவர் மு.கி.முத்துமாணிக்கம் முன்னிலையில், சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமை வகித்து, அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எஸ்.நாகேந்திரன், சு.சடையப்பன், ஒன்றிய பொறியாளர்கள் மணிமேகலை, கம்பர், தலைமை பொதுக்குழு உறுப்பினர் தனபால், ஒன்றியக்குழு உறுப்பினர் அமுதா ராஜேந்திரன், ஊராட்சி மன்றத் தலைவர்கள் மீனா கார்த்திக் (அழகியநாயகிபுரம்), மீனாம்பாள் சுப்பிரமணியன் (மருங்கப்பள்ளம்) மற்றும் மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.