தஞ்சாவூர், நவ.17 -
தஞ்சாவூர் மாவட்டம்,
பேராவூரணி ஸ்டார் லயன்ஸ் சங்கம், பேராவூரணி கோக்கனட் சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கம், ஸ்ரீ விநாயகா ஜுவல்லர்ஸ் மற்றும் நாமக்கல் எம்.எம். மருத்துவமனை இணைந்து பேராவூரணி ஸ்ரீ விநாயகா திருமண மண்டபத்தில், மூட்டு வலி, முதுகு வலி, எலும்பு தேய்மானம் இலவச மருத்துவ சிகிச்சை முகாமை நடத்தினர்.
இம்முகாமுக்கு ஸ்டார் லயன்ஸ் சங்கத் தலைவர் சி.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். கோகனட்சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கத் தலைவர் நா.ப.ரமேஷ் முன்னிலை வகித்தார்.
கோகனட்சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கச் செயலாளர் ஜி.குமரன் வரவேற்றார்.
பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார், ஸ்ரீ விநாயகா ஜூவல்லர்ஸ், திருமண மஹால் உரிமையாளர் இ.வீ.சந்திரமோகன், நாமக்கல் எம்.எம் மருத்துவமனை தலைமை மருத்துவர் எம்.சிவக்குமார் ஆகியோர் குத்துவிளக்கேற்றி மருத்துவ முகாமைத் தொடங்கி வைத்தனர்.
லயன்ஸ் சங்க நிர்வாகிகள் லெ.க.இளங்கோ, எஸ்.பாண்டியராஜன், எம்.கனகராஜ், எம்.நீலகண்டன், ஆர்.ஆதித்யன், செ.இராமநாதன், ஆவி.ரவி, இ.வீ.சந்திரமோகன், பொறியாளர் ஏ.சி.சி.ராஜா, ஏ.எஸ்.ஏ.தெட்சிணாமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மருத்துவமனை ஒருங்கிணைப்பாளர் டி.நாகராஜ் முகாமை ஒருங்கிணைத்தார்.
நிறைவாக, ஸ்டார் லயன்ஸ் சங்க பொருளாளர் டி.சாமியப்பன் நன்றி கூறினார்.
முகாமில் 456 பேர் கலந்து கொண்டு புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றனர். இதில், 25 பேர் மேல் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டனர்.