தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, திருவோணம் ஒன்றியம், நெய்வேலி ஊராட்சி, செட்டித் தெருவில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, சாலை அமைக்கும் பணி ரூ.13 லட்சம் மதிப்பீட்டிலும், வெங்கரை கோட்டைக்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில், மாணவர்கள் மிதிவண்டிகளை நிறுத்துமிடம் ரூ.12 லட்சம் மதிப்பீட்டிலும் அமைக்கப்படுகிறது.
இந்தப் பணிகளை பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமை வகித்து துவக்கி வைத்தார். தி.மு.க திருவோணம் தெற்கு ஒன்றியச் செயலாளர் சோம.கண்ணப்பன்,
ஒன்றியக்குழு தலைவர் செல்லம் சௌந்தர்ராஜன்,
முன்னிலை வகித்தனர்.
தி.மு.க தலைமை பொதுக்குழு உறுப்பினர் அ.அப்துல் மஜீத், அவைத்தலைவர் கோவிந்தராசு,
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பொய்யாமொழி, கண்ணன்,
ஊராட்சி மன்றத் தலைவர்கள், பள்ளித் தலைமையாசிரியர் ராமச்சந்திரன், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் செல்வி, ஒப்பந்ததாரர் வீரமுத்து, திமுக கிளைக் கழகச் செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.