தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, கொன்றைக்காடு அரசு உயர்நிலைப்பள்ளியில் 6 வகுப்பறைகள் கொண்ட பள்ளிக்கட்டடம் ரூ.1 கோடியே 27 லட்சம் மதிப்பீட்டிலும், செந்தலைவயல் அரசு உயர்நிலைப்பள்ளியில் மூன்று வகுப்பறைக் கட்டடம் ரூ.60 லட்சம் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டு, சென்னையில் இருந்து காணொலிக் காட்சி மூலமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து இரு இடங்களிலும் நடைபெற்ற நிகழ்ச்சியில், பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி மாணவர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.
நிகழ்வில், சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழு தலைவரும், ஒன்றியச் செயலாளருமான மு.கி.முத்துமாணிக்கம், ஒன்றியச் செயலாளர்கள் க.அன்பழகன், வை.ரவிச்சந்திரன், மாவட்டக் குழு உறுப்பினர் அலிவலம் அ.மூர்த்தி, கல்விப்புரவலர் அ.அப்துல் மஜீத், ஒன்றியக்குழு உறுப்பினர் செய்யது, ஊராட்சி மன்றத் தலைவர்கள் செந்தில்குமார் (காலகம்), ரகுமத்துல்லா (செந்தலைவயல்), ஒப்பந்ததாரர் ராமநாதன், தலைமை ஆசிரியர்கள் குமரேசன் (கொன்றைக்காடு), செல்வராஜ் (செந்தலைவயல்), பெற்றோர் ஆசிரியர் கழகம் எஸ்.கே.ராமமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.