பேராவூரணி ஓபி - 194 ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் சார்ந்த கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் கோரி விண்ணப்பித்த ஆசிரியர்களுக்கு, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கோரிக்கையினை ஏற்று மிக விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு இரண்டே நாளில் ஐந்து ஆசிரியப் பெருமக்களுக்கும், இன்று கடனுக்கான காசோலையினை வழங்கிய ஜனார்த்தணன் அவர்களுக்கு, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பாக சால்வை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தஞ்சை மாவட்ட செயலாளர் செ.இராகவன்துரை,
பேராவூரணி வட்டாரச் செயலாளர் சி.லெட்சுமணசாமி,
முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் க.நீலகண்டன்,
முன்னாள் மாவட்ட துணைத் தலைவர் கு.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.