தஞ்சாவூர், டிச.11 - தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், குருவிக்கரம்பை ஊராட்சி அருள்மிகு ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவில் வளாகத்தில், மக்கள் நேர்காணல் முகாம், மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஜெயஸ்ரீ வரவேற்றார். பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் முன்னிலை வகித்துப் பேசினார். மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழு தலைவர் மு.கி.முத்துமாணிக்கம், குருவிக்கரம்பை ஊராட்சி மன்றத் தலைவர் எஸ்.வைரவன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். நேர் காணல் முகாமில் 99 பயனாளிகளுக்கு, ரூ.11 லட்சத்து, 88 ஆயிரத்து, 98 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கியும், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு ஆட்சியர் பேசினார். இம்முகாமில், பயிற்சி ஆட்சியர் உத்கர்ஷ் குமார், வட்டாட்சியர் இரா.தெய்வானை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நாகேந்திரன், சடையப்பன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் சுவாதி காமராஜ், இலக்கியா நெப்போலியன், ஒன்றியக்குழு உறுப்பினர் பாமா செந்தில் நாதன், திமுக சேதுபாவாசத்திரம் தெற்கு ஒன்றியச் செயலாளர் வை.ரவிச்சந்திரன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் அ.அப்துல் மஜீத், திமுக மாநில மீனவர் அணி துணைச் செயலாளர் ஜெயபிரகாஷ், திமுக பெருமகளூர் நகரச் செயலாளர் மாரிமுத்து மற்றும் அரசு அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். நிறைவாக, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சங்கர் நன்றி கூறினார்.