பேராவூரணி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் சேவாதளம் சார்பில், தென்னங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு, பேனா முதலிய எழுது பொருட்கள் வழங்கி, காங்கிரஸ் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சோனியா காந்தி அவர்களின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்வுக்கு, தஞ்சை மாவட்ட காங்கிரஸ் சேவாதள தலைவர் ஏஎஸ்ஏ.தட்சிணாமூர்த்தி அனைவரையும் வரவேற்றார்.முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.சிங்காரம் தலைமை வகித்தார். பேராவூரணி காங்கிரஸ் சேவாதள தலைவர் சண்முகம், காங்கிரஸ் கட்சி மாவட்ட பொதுச் செயலாளர் சரவணன், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர் லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகிக்க, பள்ளி குழந்தைகளுக்கு எழுது பொருள்கள் வழங்கப்பட்டன. நிகழ்வுக்கான ஏற்பாடுகளை, தஞ்சை மாவட்ட காங்கிரஸ் சேவாதள தலைவர் ஏஎஸ்ஏ.தட்சிணாமூர்த்தி செய்திருந்தார்.