பேராவூரணி பகுதியில் மிகவும் பிரபலமான மருத்துவராக இருந்து வருகிறவர் மருத்துவர் துரை.நீலகண்டன். இவர் மருத்துவம் மட்டுமின்றி பொது சேவை, எழுத்து மற்றும் இலக்கியம் என பல்வேறு தளங்களில் இயங்கி வருகிறார். மருத்துவரின் இந்த சேவையை பாராட்டி, பேராவூரணி கோக்கனட்சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கம் சார்பில் மருத்துவர் துரை.நீலகண்டன் அவர்களுக்கு மக்கள் மருத்துவர் எனும் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. நிகழ்வில், சங்கத் தலைவர் நா.ப.ரமேஷ், முன்னாள் தலைவர் பாலசுப்பிரமணியன், மாவட்ட காந்தி ஜெயந்தி தலைவர் ஏஎஸ்ஏ.தட்சிணாமூர்த்தி, நல்லாசிரியர் மனோகரன் மற்றும் லயன்ஸ் சங்க உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.