தாய்மண் பாலம் மற்றும் கெயின் ஸ்போர்ட்ஸ் அகாடமி இணைந்து, பட்டுக்கோட்டை வட்டம் மதன்பட்டஊர் சிவனாம்புஞ்சை, தாய்மண் பாலம் விளையாட்டு திடலில், மாநில அளவிலான தடகளப் போட்டிகளை, நாளை ஞாயிற்றுக்கிழமை நடத்த இருக்கிறார்கள். 100 மீட்டர், 200 மீட்டர், லாங் ஜம்ப், மெடிக்கல் பால் த்துரோ மற்றும் ஷாட் புட் ஆகிய போட்டிகள் நடைபெற இருக்கிறது. போட்டிகள் பல்வேறு பிரிவுகளாக எட்டு வயதுக்கு கீழ், பத்து வயதுக்கு கீழ், 12 வயதுக்கு கீழ், 14 வயதுக்கு கீழ், 17 வயதுக்கு கீழ் மற்றும் 19 வயதுக்கு கீழ் ஆகிய பிரிவுகளாக நடைபெற இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு 8778738236, 9843116087 மற்றும் வாட்ஸ்அப் எண் 8111072947 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விவரங்களை அறியலாம் என பொறுப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.