கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு பிப்ரவரி 09 தினத்தை முன்னிட்டு பேராவூரணி பசுமை பூமி வேளாண் சமூக நல அறக்கட்டளை சார்பில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி பேராவூரணி பசுமை பூமியின் நர்சரியில் இன்று காலை 11 மணியளவில் அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் ப. ஜெயவர்த்தினி வரவேற்க பெரியார் அம்பேத்கர் மக்கள் கழக மாவட்ட செயலாளர் அனல் ச. ரவீந்திரன் அறக்கட்டளையின் நிர்வாக அலுவலர் சுஜய் ஆகியோர் முன்னிலையில் தமிழக அரசின் தஞ்சாவூர் மாவட்ட கொத்தடிமை தொழிலாளர் கண்காணிப்பு குழு உறுப்பினரும் பெரியார் அம்பேத்கர் மக்கள் கழகத்தின் தலைவர் ஆன டாக்டர் டி.புனல் ரவி தலைமையில் பேராவூரணி காவல் ஆய்வாளர் பசுபதி உறுதிமொழி வாசிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர் நிகழ்சியில் மூத்த தொழிலாளர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது தொழிலாளர்கள், காசாளர். பழனிவேல் நிர்வாக மேலாளர். ஸ்ரீஜா ஜெனிபர் விற்பனை மேலாளர். நிகழ் குணால், எடிட்டிங் மேலாளர்.ராஜேஸ்வரி, சத்திய பிரியா சௌமியா சொர்ணமேரி சலேத்த மேரி மற்றும் 25 தொழிலாளர்கள் கலந்து கொண்டனர் இறுதியில் நர்சரி மேலாளர் ரஞ்சிதா நன்றி கூறினார்..