தஞ்சாவூர், பிப்.10 -
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.1 கோடியே 88 லட்சம் மதிப்பீட்டில், மூன்று தளத்துடன் கூடிய, 8 வகுப்பறை கட்டிடம் கட்டப்படுகிறது.
அதற்கான அடிக்கல் நாட்டு விழா திங்கள்கிழமை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பேராவூரணி எம்எல்ஏ நா.அசோக்குமார் புதிய கட்டிடப் பணிக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
நிகழ்வில்,
பள்ளித் தலைமை ஆசிரியர் தனலெட்சுமி, அட்மா தலைவர் க.அன்பழகன், கல்விப் புரவலர் அ.அப்துல் மஜீத், பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர் ஹரிதரன், உதவி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.