பேராவூரணி தர்ஷனா மருத்துவமனையில், உலக புத்தக நாளினை முன்னிட்டு புத்தக வாசிப்பு கூட்டம் நடந்தது.
டாக்டர் நீலகண்டன் தலைமை வகித்து, புத்தக வாசிப்பின் அவசியம் குறித்து பேசுகையில், புத்தகங்கள் வாசிப்பது நம்மை தேற்றும், நம்மை வளர்த்தெடுக்கும், பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையை அடையலாம், விஜய் மல்லையா போன்று ஏமாற்றும் மனநிலை நமக்கு இருக்காது, பள்ளி பாட புத்தகங்களை தாண்டி நிறைய புத்தகங்களை தேடித் தேடி மாணவர்கள் வாசிக்க வேண்டும். நான் சிறுவயதில் இருக்கும் பொழுது பாட புத்தகங்களை தாண்டி கண்ணதாசன் புத்தகங்களையெல்லாம் வாசித்தேன். புத்தகங்களை தேர்ந்தெடுத்து வாசித்துப் பழக வேண்டும். நாளிதழ் வாசிக்கும் பழக்கம் நம்மிடம் இருத்தல் அவசியம். என்னை வளர்த்தது வாசிப்பு மட்டும் தான் என்றார்.
நாமும் மனிதர்கள் நூலாசிரியர் ஆறுநீலகண்டன் சூழலியல் குறித்த பேசினார்.
இதில் தமிழ் வழிக் கல்வி இயக்க பொறுப்பாளர்கள் மெய்ச்சுடர்வெங்கடேசன், பழனிவேல், திருவேங்கடம், வர்த்தகர் கழக பொருளாளர் மணிகண்டன், அமிழ் விளையாட்டுக் கழக பொறுப்பாளர் உதயகுமார், ஐன்ஸ்டீன் ஹாக்கிங் அறிவியல் மன்ற பொறுப்பாளர் கலைச்செல்வன், ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.