பேராவூரணி அமிழ் ஸ்போர்ட்ஸ் அகாடமியில், 12 நாட்கள் கோடைகால பயிற்சி முகாம் துவக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, அமிழ் ஸ்போர்ட்ஸ் அகாடமியின் நிறுவனர் மருத உதயகுமார் தலைமை வகித்தார். யோகா பயிற்சியாளர் ஜெயபிரகாஷ் யோகா வகுப்பை நடத்தினார். இன்று தொடங்கி மே 6ஆம் தேதி வரை யோகா, சிலம்பம், உடற்பயிற்சி, தடகளம் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட இருக்கிறது. நிகழ்ச்சியில், அகாடமி தலைவர் முனைவர் வேத கரம்சந்த் காந்தி, செயலாளர் ஆசிரியர் காஜா முகையதின், அகாடமியின் பெற்றோர் சங்க பொறுப்பாளர்கள் தலைவர் சு.நித்யா துணைத் தலைவர் இ. நர்கீஸ் பானு செயலாளர் ம.ஹேமலதா துணைச் செயலாளர் சே.ரஹ்மத் நிஷா மற்றும் பொருளாளர் மூ.லலிதா ஆகியோர் கலந்து கொண்டனர். ஏராளமான பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
அமிழ் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் கோடைகால பயிற்சி முகாம் துவக்கம்
ஏப்ரல் 25, 2025
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க