பேராவூரணி பேரை துளிர் நண்பர்கள் அறக்கட்டளை சார்பில், ஆதனூர் புனித அன்னாள் ஆலயத்தில் நடைபெற்ற புனித வெள்ளி ஆராதனையில் கலந்து கொண்ட கிறிஸ்தவர்களுக்கு, மோர், தர்பூசணி மற்றும் பிஸ்கட்டுகள் வழங்கி மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தினர். நிகழ்வுக்கு, அறக்கட்டளை தலைவர் விஆர்ஜி நீலகண்டன், செயலாளர் மகாராஜா மற்றும் பொருளாளர் எம்.செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வில், நிர்வாகிகள் என்எஸ்.சேகர், முகமது முஸ்கீர், முன்னாள் நிர்வாகிகள் முனைவர் வேத.கரம்சந்த் காந்தி, தாமரைச்செல்வன், நாகேந்திரகுமார், வன்மீகநாதன், வழக்கறிஞர் ஏகாம்பரம், அக்ரி கார்த்தி, வெங்கடேஷ், எசேக்கியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.