தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் வட்டார கிளையின் சார்பில் பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா படப்பைக்காடு வி.ஆர்.டி கலை திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவிற்கு வட்டாரத் தலைவர் ந.ஞானம்பாள் தலைமை தாங்கினார். வட்டாரச் செயலாளர் ஆ.வினோத் வரவேற்புரையாற்றினார். மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் து.டேனியல், முன்னாள் வட்டார தலைவர் மு.செல்வநாயகம், மாவட்ட துணைத்தலைவர் பா.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவில் காசாங்காடு கிழக்கு தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியை தே. ஜோஸ்பின், சிலம்பவேளாண்காடு தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியை ரே. இந்திராணி, ஆலத்தூர் தொடக்கப்பள்ளியின் இடைநிலை ஆசிரியை கோ.சுமதி, நாகப்பட்டினம் மாவட்டம் கோவிந்தன்காடு நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ப.இளஞ்செழியன் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மாவட்டச் செயலாளர் திரு. செ.இராகவன்துரை பணி நிறைவு பெறுகின்ற ஆசிரியர்களுக்கும், பணி மாறுதலில் சென்ற ஆசிரியருக்கும் கணையாழி அணிவித்தும், சால்வை, சந்தனமாலை அணிவித்தும் சிறப்புரையாற்றினார். இவ்விழாவில் மாநில செயற்குழு உறுப்பினர் ச.துரைப்பாண்டி, மாவட்டத் தலைவர் க.அருள், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் ஆ.பாஸ்கர், பட்டுக்கோட்டை வட்டார செயலாளர் இரா.குமார், பேராவூரணி வட்டார செயலாளர் சி.லெட்சுமணசாமி, பட்டுக்கோட்டை வட்டார தலைவர் கோ.நடராஜன் பேராவூரணி வட்டார தலைவர் கு.பாலச்சந்தர், பட்டுக்கோட்டை வட்டார பொருளாளர் திரு.சரவணன், பேராவூரணி வட்டார பொருளாளர் ச.செல்லதுரை, மேனாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் க.நீலகண்டன் மேனாள் மாவட்ட துணைத் தலைவர் கு.கிருஷ்ணமூர்த்தி மற்றும் மதுக்கூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி வட்டாரங்களைச் சார்ந்த மாவட்ட,வட்டார பொறுப்பாளர்களும் ஆசிரியர்களும் திரளாக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். நிகழ்ச்சி இறுதியில் வட்டாரப் பொருளாளர் திருமதி. *சீ.செல்வராணி* நன்றி கூறினார்