பேராவூரணி பேரூராட்சி வார்டு எண் 11, டாக்டர் அப்துல் கலாம் நகரில் பூங்கா திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்வுக்கு, பேரூராட்சி பெருந்தலைவர் சாந்தி சேகர் தலைமை வகித்தார். பேரூராட்சி உறுப்பினர் மகாலட்சுமி சதீஷ்குமார் அனைவரையும் வரவேற்றார். பேரூராட்சித் துணைத் தலைவர் கி.ரெ.பழனிவேலு, செயல் அலுவலர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பூங்காவினை, சட்டமன்ற உறுப்பினர் என்.அசோக்குமார் திறந்து வைத்தார். விழாவில், திமுக ஒன்றிய தெற்கு செயலாளர் க.அன்பழகன், வடக்கு ஒன்றிய செயலாளர் கோ.இளங்கோவன், நகரச் செயலாளர் என்எஸ்.சேகர், மருத்துவ அணி அமைப்பாளர் சௌந்தர்ராஜன், மருத்துவர் எஸ்ஆர்.சந்திரசேகர், விவசாய அணி அமைப்பாளர் வழக்கறிஞர் குழ.செ.அருள்நம்பி, பேராவூரணி வர்த்தகர் கழக தலைவர் அபிராமி ஆர்.சுப்பிரமணியன், செயலாளர் அப்துல் ரகுமான், பொருளாளர் ஜே.மணிகண்டன், கமலா கேவிஆர்.நீலகண்டன், பாலா அரங்கம் பாலமுருகன் உள்ளிட்ட பலரும், 11-வது வார்டு பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை சதீஷ்குமார் ஒருங்கிணைத்திருந்தார். பேராவூரணி பகுதியில் நல்லதொரு பூங்காவை அமைக்க முயற்சி எடுத்த வார்டு உறுப்பினர் மகாலட்சுமி சதீஷ்குமார் மற்றும் சதீஷ்குமார் ஆகியோரை பொதுமக்களும் வந்திருந்தோரும் வெகுவாக பாராட்டினர்.
பேராவூரணி பேரூராட்சி வார்டு எண் 11 டாக்டர் அப்துல் கலாம் நகரில் பூங்கா திறப்பு விழா - எம்எல்ஏ என்.அசோக்குமார் திறந்து வைத்தார்
ஏப்ரல் 27, 2025
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க